தற்போது மாறி வரும் நவீன காலகட்டத்தில், காதல் திருமணம் விவாகரத்து என்பது பலருக்கும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ஒருவரை காதலிப்பதும் அவரை திருமணம் செய்துகொள்வதும், சில ஆண்டுகளுக்கு பிறகு கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகத்து பெருவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது.
இதில் பிரபலங்கள் பலரின் வாழ்க்கையில் இது நடந்து வருகிறது. ஆனாலும் பிரபலங்கள் தங்களது முன்னாள் ஜோடியுடன் பிரிவை உறுதி செய்த பிறகு அவர்களின் வாழ்க்கையில் தலையிடுவது கிடையாது. ஆனாலும் ரசிகர்கள் சிலர் அவர்களை விடாமல் அவர்களின் முன் வாழக்கை குறித்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த வரிசையில தற்போது நடிகர் பாலா முன்னாள் மனைவி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுனமான நடிகர் பாலா தொடர்ந்து அஜித்தின் வீரம் படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமானார். மேலும் வீரம் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான இவர். கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு அவந்திகா என்ற மகள் உள்ள நிலையில், பாலா அமிர்தா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து பாலா எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையில் அம்ருதா சுரேஷ் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற மலையாள சினிமாவின் இசையமைப்பாளரானகோபி சுந்தருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடகி அம்ருதா தனது காதலனுடன் நெருக்கமான புகைப்படத்தைப் இதய ஈமோஜியுடன் “என்னுடையது” என்று தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அம்ருதாவின் சகோதரியான அபிராமி சுரேஷ், மூவரும் ஒன்றாக இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “கோபி என் சகோதரியை சிரிக்க வைக்கிறார், என்னை அவரது மூத்த மகள் என்று அழைக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மலையாளம் மற்றும் தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கோபி சுந்தர் தமிழில் ‘யாருடா மகேஷ்’, ‘பெங்களூரு நாட்கள்’ மற்றும் பிரபுதேவா-தமன்னாவின் ‘தேவி’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் அம்ருதா சுரேஷ் – கோபி சுந்தர் இருவரின் நெருக்கம் குறித்து பெஸ்புக் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் பாலா பதில் அளித்துள்ளார். அதில் தனது மனைவி எலிசபெத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்கள் ஒரு புதிய வீட்டையும் கூட வாங்கியிருப்பதாகவும் மலையாளத்தில் பதிலளித்தார்.
மேலும தனது முன்னாள் மனைவியின் புதிய காதல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், அவர் மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்வதாக அவர் கூறினார்.