மும்பை: இந்தியாவில் கேம் கன்ட்ரோலரை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனை அனைத்து விதமான டிஜிட்டல் டிவைஸ்களிலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகாம் துறையில் இயங்கி வரும் ஜியோ நிறுவனம் மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், முதல்முறையாக கேம் கன்ட்ரோலரை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு டேப்லெட், ஆண்ட்ராய்டு டிவி மற்றும் இன்னும் பிற சாதனங்களில் இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலமாக இந்த கன்ட்ரோலரை சிறப்பாக கையாளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத், 10 மீட்டர் வரையில் வயர்லெஸ் ரேஞ்ச், 20 விதமான லே-அவுட் பட்டன், இந்த கன்ட்ரோலர் உடன் இரண்டு ஜாய்ஸ்டிக்குகளும் கிடைக்கிறது.
இப்போதைக்கு இது ஜியோ நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை 3,499 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.