இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் உள்ள முட்டுக்கட்டையைத் தீர்க்க ‘பேக் சேனல்’ பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என ஊடக அறிக்கை ஒன்றில் அதிகாரபூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக விரிசல் அடைந்து வருவதாகவும், 2019 ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு, உறவுகள் மேலும் மோசமடைந்தது என்றும், இதைத் தொடர்ந்து அணு ஆயுதம் வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் நேரடி பேச்சுவார்த்தை இல்லை.
இந்த பேக் சேனல் பேச்சுவார்த்தை கடந்த 2021 பிப்ரவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது, அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் உள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் போர்நிறுத்த மீறல் தொடர்பான பெரிய சம்பவம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக முயற்சியில் எந்த வெற்றியும் இல்லை.
மேலும் படிக்க | இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்… கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்
பேக் சேனல் உரையாடல்
இந்த குறிப்பிட்ட அறிக்கையில், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அதிகார பூர் வ பேச்சுவார்த்தை அல்லாத ‘பேக் சேனல், ட்ராக்-2 அல்லது திரைக்குப் பின்னால் உரையாடலில், இரு நாடுகளின் தொடர்புடைய நபர்கள் பரஸ்பரம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் என்பதை மட்டுமே என்னால் உறுதிப்படுத்த முடியும். இருப்பினும், அந்த தொடர்புகள் பற்றிய சரியான விவரங்கள் அவர்களிடம் இல்லை என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
சில உறுதியான முடிவு எடுக்கும் வரை விவாதங்களை நடத்துவதே ‘பேக் சேனல்களின்’ நோக்கம் என்று அவர் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், பாகிஸ்தானின் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் இரு தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான கடுமையான நிபந்தனைகள், உடனடி வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR