புதுடில்லி: இந்தியாவில் பணவீக்கம் வருங்காலத்தில் படிப்படியாகக் குறையுமெனவும், ரிசர்வ் வங்கி இதற்கான உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய பொருளாரத் துறை செயலாளர் அஜய் சேத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மே மாதம் சர்வதேச வர்த்தகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் விரைவில் இந்தியாவில் பணவீக்கம் குறைந்து பொருளாதார நிலை சீராகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், உலோகங்கள் மீதான வரியை நீக்க முன்னதாக மத்திய அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே மேற்கண்ட பொருட்கள் மூலம் அரசுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் விரைவில் மக்கள் வாழ்வாதாரத்துக்குத் தேவையான அன்றாட பொருட்கள் விலை குறையும் என்பதால் இந்தியர்கள் விரைவில் வர்த்தக அனுகூலங்களை பெறுவர் எனக்கூறியுள்ளார்.
புதுடில்லி: இந்தியாவில் பணவீக்கம் வருங்காலத்தில் படிப்படியாகக் குறையுமெனவும், ரிசர்வ் வங்கி இதற்கான உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய பொருளாரத் துறை செயலாளர் அஜய் சேத்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.