சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற மனதை மருளச் செய்கிற படங்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. ஒரு வெள்ளை அறையில் வைக்கப்பட்டிருக்கிற நாற்காலி எந்தப் பக்கம் அமரும்படி இருக்கிறது என்று கண்டறிய முடியாத அளவில் குழப்பும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற புதிர். இந்த நாற்காலி எந்தப் பக்கம் இருக்கிறது சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இந்த படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமல்லாமல், பார்ப்பவர்களின் ஆளுமையைக் குறிப்பிடுபவையாகவும் இருக்கிறது. அதனால், பலரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து அவர்களின் ஆளுமையை சரியாக குறிப்பிடும்போது ஆச்சரியத்தில் அசந்துபோகிறார்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், வெள்ளை அறையில் உள்ள நாற்காலி, பலரையும் குழப்பும் படமாக இருக்கிறது. இந்த படத்தை இரணியன் ஜீனியஸ் என்ற ரெடிட் பயனர், தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தைப் பார்க்கிற யாருக்கும், நாற்காலி எல்லா பக்கமும் பார்த்தபடி இருப்பதாகத் தோன்றும். ஆனால், இந்த நாற்காலி ஒரு பக்கமாக மட்டுமே உள்ளது. இந்த நாற்காலி எந்தப் பக்கம் அமரும்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் நாற்காலி படம் குறித்து, Dezeen என்பவர் கூறுகையில், இந்த நாற்காலி பிரெஞ்சு வடிவமைப்பு ஸ்டுடியோ Ibride மூலம் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில், இந்த நாற்காலி எந்தப் பக்கம் அமரும்படி உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் வாழ்த்துகள். உங்களால் உறுதியாக சொல்லமுடியவில்லை என்றால், இதோ வீடியோவில் ஒரு நபர் நாற்காலி எந்தப் பக்கம் இருக்கிறது என்று அமர்ந்து காட்டுகிறார் பாருங்கள். நீங்கள் கண்டுபிடித்ததை சரிபார்த்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு பொழுதுபோக்கு புதிர்தான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“