இனி புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்ப்பேன் – நடிகர் அருண்விஜய்

வருங்காலங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்ப்பதாக நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார்.

யானை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அருண்விஜய், இந்த திரைப்படத்தில் சண்டை காட்சியில் தனக்கு காயம் ஏற்பட்டது என தெரிவித்தார். இருந்தபோதிலும் வலி நிவாரணி மருந்து எடுத்துக்கொண்டு அந்த சண்டைக் காட்சிகளில் தொடர்ந்து நடித்தேன் என தெரிவித்தார். மேலும் இந்த திரைப்படம் குடும்ப உறவு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
Yaanai Official First Look-Teaser-Trailer | Arun Vijay | Hari | Priya  Bhavani Shankar | GV Prakash - YouTube

அதேபோல் இந்த திரைப்படத்தில் அருண் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் போஸ்டர்களில் இடம் பிடித்திருந்தன. அது குறித்த கேள்விக்கு இந்த படத்தின் காட்சிக்குத் தேவை என்பதால் அது இடம்பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் அது போன்ற காட்சிகளை தவிர்க்க உள்ளதாக கூறினார். அருண் விஜய் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Arun vijays Yaanai Movie teaser released today! | மிரட்டலாக வெளியாகியுள்ள ' யானை' படத்தின் டீசர்! Movies News in Tamil

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.