இலங்கையின் மருந்து தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் கரிசனை


இலங்கையின் மருந்துத் தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் விசேட கரிசனை
செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக பேணிக் கொள்ளல், அதற்குத்
தேவையான வசதிகளை வழங்குவதற்கான வழிமுறை குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று
மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலையீட்டு

இலங்கையின் மருந்து தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் கரிசனை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார சம்மேளனத்தின்
கூட்டத்தின் இடையே இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்
அசேல குணவர்த்தன மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெ்ரோஸ் கேப்ரியேசஸ்
ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்திய உபகரணங்கள்
தட்டுப்பாட்டை தவிர்த்துக் கொள்ளும் விடயத்தில் உலக சுகாதார அமைப்பின் தலையீட்டை எவ்வாறு வழங்க
முடியும் என்பது குறித்தும் இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வது
குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையின் மருந்து தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் கரிசனை

உலக சுகாதார அமைப்புடன் கூட்டு வங்கிக்கணக்கை திறக்கும் இலங்கை! 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.