எதிர்வரும் நாட்களில் நாட்டில் பாண் வரிசை ஏற்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கைக விடுத்துள்ளது.
தற்போதைய நெருக்கடியில், எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மா பற்றாக்குறையால் 2000இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஏற்படப் போகும் ஆபத்து
மேலும், இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பேக்கரிகளுக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பேக்கரி தயாரிப்புக்களை வாங்குவதற்கு நீண்ட வரிசைகள் நாட்டில் ஏற்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.