இலங்கை நெருக்கடி.. பிரச்சனையை சமாளிக்க பிரதமர் ரணில் பலே வியூகம்..!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மிக மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க புதிய அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகின்றது.

முன்னதாக இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் இலங்கை முன்னேப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஆவது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இரண்டு ஆண்டுகளில் இந்த நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது, ஆனால் இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள் இந்த பிரச்சனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சரின் கருத்து?

இலங்கையின் இறக்குமதியை சார்ந்து பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்கும், அத்தியாவசிய பொருட்களுக்கு நிதியளிப்பதற்கும் தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 50 மில்லியன் டாலர்களுக்கு குறைவாகவே உள்ளது. இதற்கிடையில் 2019 இல் வரிகளை கடுமையாகக் குறைத்தது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு. அரசு விரைவில் புதிய பட்ஜெட்டை வெளியிட்டு வருவாயை அதிகரிக்க வரிகளை உயர்த்தும் என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

 பிரச்சனையை எதிர்கொள்ள குழுக்கள்

பிரச்சனையை எதிர்கொள்ள குழுக்கள்

இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு மத்தியில் தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை எதிர்கொள்ளவும், 5 நிதிக் குழுக்களும், 10 மேற்பார்வை குழுக்களும் நியமிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

என்னென்ன குழுக்கள்
 

என்னென்ன குழுக்கள்

இந்த குழுக்கள் பொது நிதிக் குழு, நிதிக் குழு, அக்கவுண்ட்ஸ் கமிட்டி, பொது நிறுவனங்களுக்கான குழு என பல குழுக்கள் அமைக்கப்படும். இந்த 10 குழுக்களும் நாடளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும். இந்த குழுக்களின் பரிந்துரைப் படி நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் முக்கிய பங்கு

இளைஞர்கள் முக்கிய பங்கு

இளைஞற்கள் தற்போதுள்ள அமைப்பை மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர். ஆக தற்போதைய பிரச்சனைகளை பற்றி அறியவும் விரும்புகிறார்கள். ஆக 15 குழுக்களுக்கும் தலா 4 இளைஞர் பிரதி நிதிகளை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

எது எப்படியோ நெருக்கடியில் உள்ள இலங்கையை மீட்டெடுக்கவும், சரிவில் பொருளாதாரத்தினை வளர்ச்சி காண வேண்டிய திட்டங்களை தீட்டவும், இந்த குழுக்கள் மிக உதவிகரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sri lanka இலங்கை

English summary

sri lanka plans to appoint 5 finance committees, 10 oversight committees to resolve crisis

Prime Minister of Sri Lanka Ranil Wickremesinghe stated that 5 Finance Committees and 10 Oversight Committees will be appointed in Sri Lanka.

Story first published: Monday, May 30, 2022, 16:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.