இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் (60 வயது) என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என ராசு அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த இளம் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது இளம்பெண் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.