கோடையில் பரவலாக முன்னெடுக்கப்படும் இசை திருவிழாக்கள் Monkeypox எனும் குரங்கம்மை பரவல் வேகமெடுக்க காரணமாக அமையலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் குரங்கம்மை தொற்றாளர்கள் எண்ணிக்கை 106 என எட்டியுள்ளதை அடுத்தே மருத்துவ நிபுணர்கள் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
மேலும், சமூக பரவல் வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையிலேயே லண்டனை சேர்ந்த மருத்துவர் Will Nutland, கோடைகால இசை விழாக்கள் குரங்கம்மை பரவலுக்கு முதன்மை காரணமாக மாறக் கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
கோடை காலம் என்பதால் மக்கள் இதுபோன்ற இசை விழாக்களுக்கு அதிகம் செல்வதாகவும், இதனாலையே குரங்கம்மை பரவும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானியாவில், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இருபாலின ஆண்களிடம் அதிக எண்ணிக்கையிலான குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடர்புடைய மக்களுக்கு, குரங்கம்மை பாதிப்பு தொடர்பில் விளக்கமளித்து வருவதாகவும் மருத்துவர் Will Nutland தெரிவித்துள்ளார்.
மேலும், இசை விழாக்களில் பெருமளவு தன்பாலின ஈர்ப்பாளர்கள் கலந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத துவக்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் Dr Hans Kluge இதே கருத்தையே வெளிப்படுத்தியிருந்தார்.
பெருங்கூட்டங்கள், திருவிழாக்கள், பெரும் விருந்துகள் என திரளும் மக்களால் குரங்கம்மை பரவல் அச்சம் தொடர்பில் கவலை தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரித்தானிய தொற்றுநோயியல் நிபுணர் Mateo Prochazka தெரிவிக்கையில், குரங்கம்மை பரவலுக்கு தன்பாலின ஈர்ப்பாளர் சமூகத்தை குற்றஞ்சாட்டுவது முறையல்ல என்றார்.