நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில், அதன் முழுமையான நிகர லாபம் 18% சரிவினைக் கண்டு, 2,372 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது முந்தைய ஆண்டில் 2893 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் நிகர பிரீமியம் வருவாய் 1.44 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி டிவிடெண்ட் கிடைக்குமா.. ஐபிஓவில் விட்டதை Q4ல் அறிவிக்குமா?
நிகரலாபம் சரிவு
இதன் ஒருங்கிணைந்த நிகரலாபமானது 17% சரிவினைக் கண்ட, 2409 கோடி ரூபாயாக குறைந்தூள்ளது. இது கடந்த ஆண்டில் 2917 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எல் ஐ சி-யில் இந்த அறிவிப்பானது அதன் பங்கு வெளியீட்டுக்கு பிறகு செய்யப்படும் முதல் அறிவிப்பு இதுவாகும். ஆக இது பங்கு சந்தைகளிலும் இதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிடெண்ட்
கடந்த மே 4 அன்று 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை திரட்டிய இன்சூரன்ஸ் ஜாம்பவான், ஒரு பங்குக்கு 1.50 ரூபாய் டிவிடெண்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முகமதிப்பு 10 ரூபாயாகும். இதன் பங்கு வெளியீட்டில் விலை 902 – 949 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்த நிலையில், மே 17 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வளாவு சரிவா?
ஏற்கனவே இப்பங்கின் விலையானது ஐபிஓ-வில் இருந்து 15% சரிவினைக் கண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வெளியீடான இது கிட்டதட்ட 3 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றது. அரசு 22.13 கோடி பங்குகள் அல்லது 3.5% பங்குகளை ஐபிஓ-வில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்கு விலை நிலவரம் என்ன?
LIC – பங்கு விலையானது என் எஸ் இ-யில் இப்பங்கின் 1.97% அதிகரித்து, 837.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 841.40 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச 825.30 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 801 ரூபாயாகவும் உள்ளது.
பிஎஸ்இ -யில் இப்பங்கின் 1.89% அதிகரித்து, 837.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 841 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 825.65 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 801.55 ரூபாயாகவும் உள்ளது.
LIC announced net profit down 18% to Rs.2,372 crore: Declared dividend
LIC’s standalone net profit fell 18% to Rs 2,372 crore in the quarter ended March, The Board has recommended dividend of ₹1.50 per equity share.