இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான வேலைவாய்ப்பையும், சராசரியாக அதிகப்படியான சம்பளத்தை அளிப்பது ஐடி துறை நிறுவனங்கள் தான்.
இதனாலேயே இந்திய குடும்பங்கள் மத்தியில் ஐடி வேலையில் சேர்ந்து விட்டாலே வாழ்க்கை செட்டிலாகிவிட்டது போன்ற பிம்பம் உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு ஐடி துறையில் சேரும் புதிய ஊழியர்கள் அதாவது பிரஷ்ஷர்கள் தொடர்ந்து குறைவான சம்பளத்தையே அளித்து வருகிறது.
இது எத்தனை பேருக்கு தெரியுமா..?
இந்த வேலைக்கு ஐடி வேலை தேவலாம்..!! பாதுகாப்பா இருக்கலாம்..!
இன்போசிஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் சிஇஓ 10 வருடத்திற்கு முன்பு வருடம் 80 லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்ற நிலையில், 2022ஆம் நிதியாண்டில் 79.75 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் இன்போசிஸ் பிரஷ்ஷர்களின் சம்பளம் இந்த 10 வருடத்தில் 2.75 லட்சம் ரூபாயில் இருந்து 3.6 லட்சமாக மட்டுமே உயர்ந்துள்ளது.
மீடியன் சம்பள அளவு
கடந்த 10 வருடத்தில் இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓ-வின் மீடியன் சம்பளம் 3.37 கோடி ரூபாயில் இருந்து 31.5 கோடி ரூபாயாக உயர்ந்து 835 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால் ஒரு பிரஷ்ஷரின் சம்பளம் 2.45 லட்சம் ரூபாயில் இருந்து 3.55 லட்சமாக மட்டுமே அதிகரித்து 45% உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது.
எவ்வளவு பெரிய பாரபட்சம் பார்த்தீங்களா..?
ஐடி நிறுவனங்கள்
இது இன்போசிஸ் நிருவனத்தில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களிலும் உள்ளது. சிஇஓ மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது, உதாரணமாக இன்போசிஸ்-ல் 1973, விப்ரோவில் 2111, ஹெச்சிஎல் நிறுவனத்தில் 1020, எல் அண்ட் டி 676, டெக் மஹிந்திராவில் 644, டிசிஎஸ் நிறுவனத்தில் 619 ஆக உள்ளது.
மோகன்தாஸ் பாய்
இன்போசிஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் கூறுகையில், “சிஇஓ மற்றும் பிரஷ்ஷர்கள் இடையேயான ஊதியத்தில் இந்த அளவு ஏற்றத்தாழ்வு இன்று ஐடி துறையில் உயர்மட்டத்தில் உள்ள கூலி பணி மனப்பான்மையைக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அணுகுமுறை
இந்திய கார்ப்பரேட் கலாச்சாரம் எப்போதும் நிறுவனத்தில் உள்ள அனைவரின் நலனுக்கும் பொறுப்பேற்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மேல்மட்டத்தில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் அமெரிக்க அணுகுமுறையை மேற்கொள்வது கவலை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
இந்தச் சம்பள வித்தியாசம் தான் ஐடி துறையில் பெரும்பாலான காலகட்டத்தில் ஊழியர்கள் அதிகமாக வெளியேறும் நிலை உள்ளது. தற்போது இந்திய ஐடி துறையில் நடுத்தர – உயர்மட்ட ஊழியர்கள் வரையில் 15-20 சதவீத வெளியேற்ற விகிதமும், ஜூனியர் பிரிவு ஊழியர்கள் மத்தியில் வெளியேற்ற விகிதம் 30-35 சதவீதமாக உள்ளது.
Indian IT CEO salary grown to 835 percent in 10yrs while fresher salary grew just 45 percent
Indian IT CEO salary grew to 835 percent in 10yrs while fresher salary grew just 45 percent ஐடி ஊழியர்களே முழிச்சிக்கோங்க.. 10 வருடத்தில் உங்க சம்பளத்தின் நிலைமை என்ன தெரியுமா..?! #CEO #Freshers