ஒரே மாதத்தில் ரூ.540 கோடி வீழ்ச்சி.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு பலத்த அடி..!

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக முதலீட்டாளர்களால் அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் முக்கியமானவர்.

இவர் ஒரு பங்கினை வாங்கினாலோ விற்றாலோ கூட அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அளவுக்கு முதலீடு செய்யும் திறன் கொண்ட ஜுன்ஜுன்வாலா, ஒரு பங்கினில் முதலீடு செய்கிறார்கள் என்றால் அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.

பங்கு சந்தையானது கடந்த சில வாரங்களாகவே மிகப்பெரிய அளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், பல்வேறு நல்ல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட பலத்த சரிவினைக் கண்டுள்ளன.

மெட்ரோ பிராண்ட்ஸ்

இதற்கிடையில் தான் பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரான ஜுன்ஜுன்வாலா பெரும் இழப்பினை சந்தித்துள்ளார். குறிப்பாக ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள மெட்ரோ பிராண்ட்ஸ் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 562.65 ரூபாயில் இருந்து 523.60 ரூபாயாக .சரிவினைக் கண்டுள்ளது. இது 39.05% சரிவினைக் கண்டுள்ளது.

ரூ.540 கோடி இழப்பு

ரூ.540 கோடி இழப்பு

இதே ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பங்கு விலையானது 701.55 ரூபாயில் இருந்து, 663 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது 38.55% சரிவினைக் கண்டுள்ளது. இவ்விரு பங்குகளின் சரிவுகளுக்கு மத்தியில் ஜுன்ஜுன்வாலாவுக்கு கிட்டத்தட்ட 540 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 எவ்வளவு பங்கு?
 

எவ்வளவு பங்கு?

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம், 10,07,53,935 பங்குகள் அல்லது 17.50% பங்குகள் உள்ளன.

மெட்ரோ பிராண்ட்ஸில் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 39,153,600 பங்குகள் அல்லது 14.40% பங்குகள் உள்ளது.

முதலீட்டில் துண்டு

முதலீட்டில் துண்டு

ஸ்டார் ஹெல்த்-ல் உள்ள 10,07,53,935 பங்குகள் 38.55% சரிவினைக் கண்டுள்ளது. ஆக இந்த பங்கினில் மட்டும் 388 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே மெட்ரோ பிராண்டில் 39,153,600 பங்குகளில் 152 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் 540 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rakesh jhunjhunwala portfolio hit Rs.540 crore in 1 month amid two stocks

Rakesh Jhunjhunwala has lost Rs 540 crore in a month due to the fall in 2 stocks in its portfolio.

Story first published: Monday, May 30, 2022, 10:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.