கடலூர் அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட காவல்துறையினர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதால், அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது கட்டப்பையில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் பிறந்த குழந்தையை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.