டாவோஸ்: இந்தியா கரோனா தடுப்பூசியை பரவலாக எடுத்துச் சென்றதில் அடைந்த வெற்றியும், தொற்றுக் கண்காணிப்பில் அதன் தொழில்நுட்பப் பயன்பாடும் உலக நாடுகளுக்கு பல பாடங்களைக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு மே 22 தொடங்கி 26 வரை நடைபெற்றது. உலக அளவில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பொருளா தார நிபுணர்கள், சமூக ஆளுமைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கடந்த 25-ம் தேதி இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பில் கேட்ஸ் இருவரிடையே சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்புத் தொடர்பான புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மாண்டவியா, ‘நானும் பில் கேட்ஸும் சுகாதாரக் கட்டமைப்பு, நோய்த் தடுப்பு மேலாண்மை, அதில் டிஜிட்டல் பயன்பாடு, குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பேசினோம். பில் கேட்ஸ் கரோனா தடுப்பூசியில் இந்தியா அடைந்த வெற்றியை மிகவும் பாராட்டினார்’ என்று குறிப்பிட்டார்.
அந்த ட்விட்டருக்கு நேற்று பில் கேட்ஸ் பதிலளித்தார். அப்போது அவர், ‘மான்சுக் மாண்டவியாவை சந்தித்தது சிறப்பாக இருந்தது. உலகின் சுகாதாரக் கட்டமைப்புக் குறித்து எங்கள் பார்வைகளைப் பகிந்து கொண்டோம். இந்தியா கரோனா தடுப்பூசியைப் பரவலாகக் கொண்டு சென்றதில் அடைந்த வெற்றியும், தொற்றுக் கண் காணிப்பில் அதன் தொழில்நுட்பப் பயன்பாடும் உலகத்துக்கு நிறைய பாடங்களைக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் முதன்மையாக செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை யில் 18 வயதுக்கு மேற்பட்டவர் களில் 88 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தவிர 2 டோஸ் தடுப்பூசி போட்ட வர்களுக்கும் முன்னெச்சரிக் கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்படுகிறது.