சென்னை: தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1 அல்லது அதற்கடுத்த நாட்களில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 3 நாட்கள் முன்னதாக நேற்றே தொடங்கியதாக இந்தியவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று தென் தமிழகத்தின் சில பகுதிகளில் பரவியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவ வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலைமையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவக்காற்றால் மேகக்கூட்டங்கள் அதிகம் உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.