கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய்! பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: பிஎம்கேர்ஸ் நிதியில் இருந்து  கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் உதவி மற்றும் பல்வேறு  உயர்கல்விக்கான கடன் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

கோவிட்-19 நோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது உயிர் பிழைத்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக PM CARES for Children திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர்,  தொழில்முறை படிப்புகளுக்கு, உயர் கல்விக்கு யாருக்காவது கல்விக் கடன் தேவைப்பட்டால், PM-CARES அதற்கும் உதவும். மற்ற தினசரி தேவைகளுக்காக அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 இதர திட்டங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டமான, 2020ம் ஆண்டு மார்ச் 11ந்தேதி முதல், 2022ம் ஆண்டு பிப்ரவரி 8ந்தேதி வரையிலான காலகட்டத்தில், கொரோனா தொற்று நோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது எஞ்சியிருக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக ,குழந்தைகளுக்கான PM CARES திட்டம் கடந்த மே 29, 2021 அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டம்மூலம், கொரோனா தொற்றால், பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகள் 23வயதை எட்டியவுடன் ரூ.10லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. மேலும், கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை மூலம் குழந்தைகளை மேம்படுத்தி,அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதன் மூலம், குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே செய்வதுடன், அவர்களுக்கு மருத்துவ காப்பீடும் செய்யப் பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்இன்று பிரதமர் மோடியால் தொடங்டிகி வைக்கப்பட்டது. இந்j நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான PM CARES இன் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு மருத்துவ காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,நிகழ்ச்சயில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “கொரோனாவால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் இந்த மாற்றம் எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன்.ஒவ்வொரு நாளும் போராட்டம், ஒவ்வொரு நாளும் தவம். இன்று நம்முடன் இருக்கும் குழந்தைகளின் வலியை வார்த்தைகளில் சொல்வது கடினம். மேலும், பெற்றோர் வழங்கிய அன்பையும், பராமரிப்பையும் யாராலும் ஈடு செய்து விட முடியாது.எனினும்,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் துணை நிற்கிறார்கள்.அந்த வகையில்,நான் பிரதமராக அல்ல உங்கள் குடும்ப உறுப்பினராகவே பேசுகிறேன்”, என்றவர்,  இக்குழந்தைகளின் தொழில்முறை படிப்புகளுக்கு,உயர்கல்விக்கு கல்விக் கடன் தேவைப்பட்டால், PM-CARES அதற்கும் உதவும். மேலும், கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.