திருவள்ளூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கோயில் அருகில் உள்ள குளத்தில் கால் கழுவதற்கு சென்றபோது கால்வழுக்கி குளத்தில் விழுந்ததில் சேற்றில் சிக்கிய அங்குள்ள தாமரைச் செடி கொடிகள் இடையே சிக்கி தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற யாரும் வராததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.