சுற்றுலா வேன் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 53 பேர் தனியார் சொகுசுப் பேருந்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நான்கு நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நதிஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.