மே மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை. குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
பொது விடுமுறைகள் எத்தனை நாட்கள்? என்பதை பார்க்கலாம்.
பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை என்பதை தெரிந்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்பட முடியும்.
கிரிப்டோகரன்சி இனி ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை: மத்திய வங்கி தலைவர்
8 நாட்கள் விடுமுறை
ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். இந்த 8 நாட்களில் வார விடுமுறை நாட்கள் 6 நாட்களாகும். மீதமுள்ள 2 நாட்கள் தான் விடுமுறை நாட்களாக உள்ளது.
விடுமுறை நாட்கள்
ஜூன் 2 – மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு ஷில்லாங்கில் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளி நாட்டு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 15 – ஓய் எம் ஏ தினம் /குரு ஹர்கோவிந்த் ஜெயின் பிறந்த நாள்/ ராஜ சங்கராந்தியை – ஐஸ்வால், புவனேஷ்வர், ஜம்மு & காஷ்மீர், ஸ்ரீ நகரில் உள்ள வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.
வார விடுமுறை நாட்கள்
ஜூன் 5 – ஞாயிறு
ஜூன் 11 – இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 12 – ஞாயிறு
ஜூன் 19 – ஞாயிறு
ஜூன் 25 – 4வது சனிக்கிழமை
ஜூன் 26 – ஞாயிறு
தமிழகத்தில் எத்தனை நாட்கள்
தமிழகத்தில் வார விடுமுறை தவிர மற்ற பொது விடுமுறை நாட்கள் விடுமுறை இல்லை. ஆக இந்த விடுமுறை நாட்களால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு என்பது இல்லை. எனினும் மற்ற மாநிலங்களிலும் ஜூன் மாதத்தில் பெரியளவில் விடுமுறை இல்லை என்பதால், இதனால் பெரியளவில் தாக்கம் இருக்காது.
இன்றைய காலகட்டத்தில் வங்கிகளுக்கு செல்வது மிக குறைவு தான் என்றாலும், வங்கிகளுக்கு சென்று செய்ய வேண்டிய வேலைகளை செய்ய உதவிகரமாக இருக்கும்.
bank alert! banks to remain shut down for 8 days in June: check here full details
June is an 8-day bank holiday, including a weekly holiday for banks. No holidays other than weekends have been declared in Tamil Nadu.