டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் எலிமெண்டரி பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சுட்டில் உயிரிழந்த 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரின் ராப் எலிமெண்டரி பள்ளியில் கடந்த மே 24ம் திகதி சால்வடார் ராமோஸ்(18) என்ற இளைஞர் நடத்திய துப்பாக்கி சுட்டு தாக்குதலில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர்.
இது அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்தில் ஒற்றை தசாப்த காலத்திற்கு பிறகு நடத்தப்பட்ட மிகவும் மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
REUTERS
இந்தநிலையில், அமெரிக்க நாடே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான கட்டுபாட்டு குரல்களை தெரிவித்தும், இறந்த 21 உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகிய இருவரும் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில் பைடனும் 19 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்ட நினைவு சின்னங்களை பார்வையிட்ட போது வெள்ளை ரோஜாக்களை வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், இறந்தவர்களுக்காக கண்ணீர் சிந்தினர்.
REUTERS
அத்துடன் ஜனாபதி ஜோ பைடன் ராப் எலிமெண்டரி பள்ளி முதல்வர் மாண்டி குட்டரெஸை அரவணைத்து அவருக்கு ஆறுதல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இறந்தவர்களுக்காக அந்தப்பகுதியில் உள்ள புனித இதய கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்தப்பட்ட அஞ்சலி கூட்டத்திலும் இருவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் இருந்து ரஷ்யா திருடிச் செல்லும் மிக முக்கிய பொருள்: அதிர்ச்சி காணொளி!
REUTERS
அப்போது கத்தோலிக்க தேவாலயத்தின் வெளியே கூடியிருந்த மக்கள் ஜனாதிபதி ஜோ பைடனை பார்த்து ”இதற்கு எதாவது செய்யுங்கள்” என முழக்கமிட்டனர்,
பொதுமக்களின் முழக்கத்திற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ”நாங்கள் நிச்சியமாக செய்வோம்” என தெரிவித்தார்.
REUTERS