டெல்லியில் கொட்டி தீர்த்தது கனமழை- மரங்கள் சாய்ந்தன, மின் கம்பங்கள் சேதம்

புதுடெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது  பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இடியுடன் கூடிய மழையால் டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கார் மீது மரம் விழுந்ததில், அதில் சிக்கிய குழந்தை உட்பட 3 பேர் கொண்ட குடும்பம் மீட்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடக்கு டெல்லியின் பல பகுதிகளில் 40 மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  மேலும் பலத்த காற்று காரணமாக டெல்லி ஜூம்மா மசூதியில் மாட பகுதி உடைந்து விழுந்தது. இதில் மூன்று  பேர் காயம் அடைந்ததாக டெல்லி இமாம் சையது அகமது புகாரி தெரிவித்துள்ளார்.  
கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.