தமிழக பிளஸ் டூ தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5 எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என்றும், பகுதி இரண்டில் 29ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.