பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு, விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விடுவிக்குமாறு அரச ஊழியர்களிடம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார்.
“நாங்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர் கொள்கிறோம், நாங்கள் எரிமலையின் உச்சியில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றுகையில் இதுவே நாம் எதிர்நோக்கும் உண்மையான நிலைமை எனவும் இத்தருணத்தில் ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு தேவாலயத்திலும், ஒவ்வொரு சமய ஸ்தலங்களிலும் சமய செயற்பாடுகSld; விவசாய பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன் ஒவ்வொரு பாடசாலையும், ஒவ்வொரு ஆசிரியரும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் நிறைவேற்று அதிகாரி முதல் பிரதேசசபை உறுப்பினர் வரை மற்றும் அமைச்சின் செயலாளர் முதல் கீழ்மட்ட ஊழியர் வரை அனைவரும் பத்து வருடங்கள் சலுகைகளை பெறுவதை ஒத்திவைக்க வேண்டும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடிக்கு அரசு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.