திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போன பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி, இன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரணி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி. இவருடைய மகள் ஹரிப்பிரியா (16வயது). ஆரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஹரி பிரியாவை காணவில்லை என்று அவரின் பெற்றோர்கள் கடந்த இரண்டு தினங்களாக தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், தனது மகளை கண்டுபிடித்து தருமாறு ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடிவந்தனர். இன்று காலை அகரம் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள விவசாய கிணற்றில் ஹரிபிரியா சடலமாக மிதந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஹரிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிரியாவின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.