எல்ஐசி நிதிநிலை அறிக்கை இன்றைய போர்டு மீட்டிங்கில் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிந்த நிலையில் சற்று முன்னர் நிதிநிலை அறிக்கை வெளியானது.
இதில் வழக்கம்போல் எல்.ஐ.சி நிறுவனம் லாபத்தை பெற்று இருந்தாலும், கடந்த ஆண்டு கிடைத்த லாபத்தை விட குறைந்துள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் 2409 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவும் முந்தைய ஆண்டில் கிடைத்த லாபத்தை விட 18% குறைவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாதத்தில் 115 பில்லியன் டாலர் இழப்பு.. குழப்பத்தில் மும்மூர்த்திகள்..!
எல்.ஐ.சி ஐபிஓ
எல்ஐசி எப்போதும் போல் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தாலும் எல்ஐசி வெளியிட்ட ஐபிஓ மிகப்பெரிய சரிவை கண்டது. பொருளாதார வல்லுநர்களின் எச்சரிக்கையையும் மீறி ஏராளமானோர் இந்த எல்.ஐ.சி ஐபிஓவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர்.
சரிவு
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி பங்குச் சந்தையில் எல்.ஐ.சி பட்டியலிடப்பட்ட போது முதல் நாளே இந்த பங்கு 8 சதவீதம் சரிவை கண்டதால் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் விலை ஏறும் என்று தங்களைத் தாங்களே ஆறுதல் செய்து கொண்டிருந்த நிலையில் மென்மேலும் குறைந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தது.
டிவிடெண்ட்
இந்த நிலையில் எல்.ஐ.சி பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஓரளவு ஆறுதலை தந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் எல்ஐசி ஐபிஓ வாங்கிய பங்குதாரர்களுக்கு ரூபாய் 1.50 மட்டுமே டிவிடெண்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றம்
15 பங்குகள் கொண்ட எல்.ஐ.சி 949 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றைய நிலையில் அந்த பங்கின் மதிப்பு 837.05 ரூபாய் மட்டுமே. எனவே ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் 112 ரூபாய் நஷ்டம் ஆகியிருக்கும் நிலையில் ஒரு ஈக்யூடிட்டி பங்குக்கு டிவிடெண்ட் வெறும் ரூ. 1.50 தானா? என்ற கேள்வியை ஏமாற்றத்துடன் முதலீட்டாளர்கள் கேட்டு வருகின்றனர்.
எதிர்பார்ப்பு
வருங்காலத்திலாவது எல்ஐசி பங்குகள் லாபத்துடன் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பங்குதாரர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அதற்கேற்றவாறு எல்ஐசி நிறுவனமும் புதிய புதிய திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
LIC Declares Interim Dividend Of Rs.1.50 Per Share
LIC Declares Interim Dividend Of Rs.1.50 Per Share | நஷ்டம் ரூ.112, டிவிடெண்ட் ரூ.1.50 தானா? எல்.ஐ.சி முதலீட்டாளர்கள் அதிருப்தி