நானி – நஸ்ரியாவின் ‘அடடே சுந்தரா’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டை கொடுத்திருக்கிறது படக்குழு.
‘ஷ்யாம் சிங்கா ராய்’ வெற்றிக்குப் பிறகு நானி ‘தசரா’, ‘அடடே சுந்தரா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில், ‘அடடே சுந்தரா’வில் திருமணத்திற்குப்பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை நஸ்ரியா. கடந்த 2014-ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் படங்களில் நடிக்காமல் ’வரதன்’, ’கும்ப்ளங்கி நைட்ஸ்’ உள்ளிட்டப் படங்களை மட்டுமே தயாரிக்க செய்தார். கடைசியாக ஃபகத் ஃபாசிலுடன் ’ட்ரான்ஸ்’ படத்தில் மட்டுமே தலைகாட்டியிருந்தார். இந்நிலையில், நஸ்ரியா முதன்முறையாக தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக ’அடடே சுந்தரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் `அண்டி சுந்தரானிகி’ என்ற பெயரிலும் தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. நஸ்ரியாவின் ரீ என்ட்ரி படம் என்பதால் தியேட்டர்களில் மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள ‘அடடே சுந்தரா’ வரும் ஜூன் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி வரும் ஜூன் 2 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.