கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.
155 அடி உயரம் கொண்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் 113.57 அடியாகவும் (73.27%),,120 அடி கொண்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 43. 29 அடியாகவும் (36.8%) காணப்படுவதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்து லக்சபான, புதிய லக்சபான, விமல சுரேந்திர, மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி காணப்பட்டால் நீர் மூலமான மின்சார உற்பத்தி அதிகரிக்கப் படுவதுடன், இதன் அதிகபட்ச மின்னுற்பத்தி 350 மெகாவாட் என்றும் தற்போது தேசிய மின் உற்பத்திக்குத் தேவையான 240 மெகாவாட் அளிப்பதாகவும், இதன் மூலம் நாட்டில் நிலவிவரும் மின்சார மின்சார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் எனவும் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.