பஞ்சாபி பாடகர் படுகொலை- சிபிஐ, என்ஐஏ விசாரணை கோரும் தந்தை

சண்டிகர்:
பஞ்சாப் மாநில பிரபல பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்ற மறுநாள் அவரை கொலை செய்துள்ளனர்.  இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவரது தந்தை பால்கவுர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
அவரது கோரிக்கையை முதல்வர் பகந்த் மான் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாடகல் சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பை குறைப்பது தொடர்பான முடிவு குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என கூறி உள்ள அவர், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.