வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டில்லி: பண மோசடி வழக்கில் டில்லி ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின், கடந்த 2011-12-ம் ஆண்டில் ரூ. 11.78 கோடியும், 2015-16-ம் ஆண்டில் ரூ. 4.63 கோடியும் பல்வேறு நிறுவனங்கள் பெயரில் பண பரிவர்த்தனை செய்துள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து ஹாவாலா மூலம் பணபரிவர்த்தனை செய்ததும், ஹாவாலா பணத்தை 4 நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்தததும், அந்நிறுவனங்கள் அனைத்தும் போலியான நிறுவனங்கள் எனவும் தெரியவந்தது.
இதையடுத்து அமலாக்கத்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.இதையடுத்து இந்த வழக்கில் இன்று அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அதிரடியாக கைது செய்தனர்.
பா.ஜ.வுக்கு தோல்வி பயம்
இது குறித்து டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியது, வரப்போகும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தலில் அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக சத்யேந்திர ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தேர்தல் பணி செய்யவிடாமல் தடுக்க மத்திய அரசு பொய் வழக்குபதிவு கைது செய்துள்ளது. பா.ஜ.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றார்.
Advertisement