சீனாவில் 3 முதல் 6வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இடம்பெற்றுள்ள சில படங்கள் பார்ப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதாவது பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள வண்ண புகைப்படங்களில் சிறுவர், சிறுமிகள் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக. பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அத்துடன் குழந்தைகள் ஓரப்பார்வை பார்த்துக்கொண்டும், நாக்கை நீட்டிக் கொண்டும் இருப்பது போல ஆபாச சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
விமான நிலையத்தில் செக்ஸ் வீடியோ ஒளிபரப்பு – பயணிகள் அதிர்ச்சி!
மேலும் அமெரிக்க தேசிய கொடியை ஆடையாக அணிந்தபடி சில குழந்தைகள் இருப்பது போன்ற புகைப்படங்களும் பாடப்புத்தகத்தில் உள்ளன. அந்த படங்கள் இனரீதியான மற்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட புத்தகங்கள் முறையாக, படித்து பார்க்கப்படாமலும், மறுஆய்வு செய்யப்படாமலும் அச்சிடப்பட்டுள்ள புத்தகங்களில் குழந்தைகள் இனரீதியாக மற்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அரசின் மீது பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சர்ச்சை குறித்து ஆய்வு நடத்த கல்வி அமைச்சகத்துக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.