பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கார் ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் சுப்பிரமணியம் இருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கமான பழக்கத்தால் பள்ளி மாணவி 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய கார் ஓட்டுநர் சுப்பிரமணியத்தை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.