உக்ரைனில் நகரத்தை பாதுகாக்க உழைக்கவில்லை என்று கூறி கார்கிவ் நகரத்தில் பாதுகாப்பு தலைவரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளார் ஜெலென்ஸ்கி.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார்.
அவர் கார்கிவ் சென்ற பிறகு, வடகிழக்கு நகரத்தின் பாதுகாப்புத் தலைவரை ஒரு அரிய பொது கண்டனத்தில் பணிநீக்கம் செய்ததாக அறிவித்தார்.
புடின் இன்னும் 3 ஆண்டுகள் தான் உயிரோடு இருப்பார்! ரஷ்ய உளவாளி பரபரப்பு தகவல்
“முழு அளவிலான போரின் முதல் நாட்களில் இருந்து நகரத்தைப் பாதுகாக்க உழைக்காமல், தன்னைப் பற்றி மட்டுமே நினைத்ததற்காக” அந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், மற்றவர்கள் “மிகவும் திறம்பட” உழைத்தபோதும், முன்னாள் தலைவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.
ஜனாதிபதி அந்த அதிகாரியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், உக்ரேனிய ஊடக அறிக்கைகள் அவரை கார்கிவ் பிராந்தியத்தின் SBU பாதுகாப்பு சேவையின் தலைவரான ரோமன் டுடின் என அடையாளப்படுத்தியுள்ளன.
தலையில் கை வைத்த சிறுவனை 13 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஒபாமா!
போரின் ஆரம்ப கட்டங்களில் தலைநகர் கீவை கைப்பற்றத் தவறிய ரஷ்யா, பின்னர் கார்கிவ் பகுதியில் இருந்து பின்வாங்கியதால், கிழக்கு டான்பாஸ் பகுதிக்கு தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.