பாட்னா: இந்திய தொல்லியல் துறை ஆய்வின்படி, பிஹாரின் ஜமுய் மாவட்டத்தில் மட்டும் 222.88 மில்லியன் டன் தங்கம் பூமிக்குள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 37.60 டன் அளவுக்கு உயர்ந்த தங்கதாதுமண் இருக்கிறது என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஹார் கனிம வள கூடுதல் தலைமை செயலர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா கூறும்போது “இந்திய தொல்லியல் துறை, தேசிய கனிம வள மேம்பாட்டு கழகம் ஆகியவற்று டன் ஜமுய் மாவட்டத்தில் தங்கத்தை தோண்டி எடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஜமுய் மாவட்டத்தில் கர்மாதியா, ஜாஜா, சோனோ ஆகிய இடங்களில் அதிக தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. தங்கத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக மத்திய கனிம வள அமைப்புகள், ஜி-3 நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.
பிஹாரின் ஜமுய் பகுதியில் அதிக அளவு தங்கத் தாது கிடைப்பதாக கடந்த ஆண்டு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் தெரிவித்திருந்தார். நாட்டிலேயே அதிகமான தங்க கனிம வளம் பிஹாரில்தான் இருக்கிறது. பிஹாரில் மட்டும் 222.88 மில்லியன் டன் தங்கம் இருப்பு இருக்கிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 44 சதவீதமாகும்.