மீண்டும் அமெரிக்கப் பள்ளி ஒன்றிற்கு துப்பாக்கிச்சூடு மிரட்டல்: சிக்கியது யார் பாருங்கள்…


அமெரிக்கப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு சில நாட்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெக்சாசிலுள்ள Uvaldeவில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள் மீளாத் துயரத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், ப்ளோரிடாவிலுள்ள Cape Coral என்ற இடத்தில் அமைந்துள்ள Patriot Elementary School என்ற பள்ளிக்கு மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது.

அதில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள் பொலிசார்.
 

ஏற்கனவே Uvalde பள்ளியில் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காத விடயம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாங்கள் ஒரு விநாடி கூட தாமதிக்கவில்லை என்று கூறியுள்ள Lee County பொலிசார் பள்ளிக்கு விரைந்து சென்றுள்ளார்கள்.

அந்த செய்தியை அனுப்பிய மாணவரைப் பார்த்த பொலிசார் திடுக்கிட்டுள்ளார்கள். காரணம், அந்த மிரட்டல் செய்தியை அனுப்பிய மாணவன் ஒரு 10 வயது சிறுவன்.

Daniel Issac Marquez என்ற அந்த சிறுவன் போலியாக, வேடிக்கைக்காக செய்தி அனுப்பினானோ என்னவோ தெரியாது, ஆனால், Uvalde பள்ளியில் 19 மாணவர்களும் இரண்டு ஆசிரியைகளும் கொல்லப்பட்ட விடயம் அமெரிக்கா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த விடயத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என முடிவு செய்த பொலிசார் உடனைடியாக அந்த சிறுவனைக் கைது செய்தார்கள்.
 

Marquez கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

பொதுவாக, மேலை நாடுகளில் சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அவர்களது பெயர் அவ்வளவு எளிதில் வெளியிடப்படுவதில்லை.

ஆனால், Uvalde பள்ளி சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா இருக்கும் மனநிலையில், அந்தச் சிறுவனின் பெயரை மறைக்காமல் வெளியிட்டுள்ளார்கள் பொலிசார்.

Marquezஇடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

மீண்டும் அமெரிக்கப் பள்ளி ஒன்றிற்கு துப்பாக்கிச்சூடு மிரட்டல்: சிக்கியது யார் பாருங்கள்...

மீண்டும் அமெரிக்கப் பள்ளி ஒன்றிற்கு துப்பாக்கிச்சூடு மிரட்டல்: சிக்கியது யார் பாருங்கள்...

மீண்டும் அமெரிக்கப் பள்ளி ஒன்றிற்கு துப்பாக்கிச்சூடு மிரட்டல்: சிக்கியது யார் பாருங்கள்...



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.