மெட்ரோ: நேருக்கு நேர் மோதும் அம்பானி அதானி..!

இந்திய நுகர்வோர் சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜெர்மனி நாட்டின் மெட்ரோ ஏஜி நிறுவனம், வர்த்தகப் போட்டியை சமாளிக்க முடியாமல் மொத்தமாக இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்திய வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்து வெளியேற முடிவு செய்துள்ள மெட்ரோ நிர்வாகத்திற்கு இந்திய நிறுவனங்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இந்திய பணக்காரர்களின் வீட்டை பார்த்து இருக்கீங்களா..? இது வீடு இல்லை, சொர்க்கம்..!

டாடா முதல் ரிலையன்ஸ் வரை

டாடா முதல் ரிலையன்ஸ் வரை

இந்தியாவில் ரீடைல் மற்றும் நுகர்வோர் விற்பனை சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், டாடா முதல் ரிலையன்ஸ் வரையில் பல முன்னணி வர்த்தகக் குழுமங்கள் இச்சந்தைக்குள் பெரும் பணப் பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளது.

போட்டி

போட்டி

இந்த வேளையில் லட்டு மாதிரி மெட்ரோ நிறுவனம் இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது, இந்நிறுவனத்தைக் கைப்பற்ற அமேசான், தாய்லாந்து நாட்டின் Charoen Pokphand (CP) Group, ரிலையன்ஸ் ரீடைஸ், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (Dmart), டாடா குரூப், லூலூ குரூப், சமாரா கேப்பிடல் போன்ற நிறுவனங்கள் முதல் நாளிலேயே கைப்பற்ற விருப்பம் தெரிவித்தது.

20 நிறுவனங்கள்
 

20 நிறுவனங்கள்

இதன் பின்பு ஈகாமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்குவதற்காகக் களமிறங்கியுள்ள ஸ்விக்கி, ரீடைல் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை மெல்ல மெல்ல கட்டமைத்து வரும் அதானி குரூப்-ம் மெட்ரோ நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்பம் தெரிவித்தது. இப்படி மொத்தம் 20 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்த வேளையில் நினைத்தபடியே போட்டியும் விலையும் அதிகமாக வைக்கப்பட்டது.

அதானியும் முகேஷ் அம்பானியும்

அதானியும் முகேஷ் அம்பானியும்

இதன் எதிரொலியாக மெட்ரோ நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் ரிலையன்ஸ் ரீடைல், அதானி குரூப் மற்றும் தாய்லாந்து நாட்டின் Charoen Pokphand (CP) Group ஆகிய நிறுவனங்கள் போட்டியில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற அதானியும் முகேஷ் அம்பானியும் போட்டி போடுகின்றனர் என்பதால் மெட்ரோ-வுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.

மெட்ரோ

மெட்ரோ

B2B பிரிவில் வர்த்தகம் செய்யும் மெட்ரோ நிறுவனம் நுகர்வோர் பொருட்களை மொத்த விலையில் இந்தியா முழுவதும் சிறு மற்றும் நடுத்தரக் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறது. மெட்ரோ இந்தியாவில் 31 கடைகளையும், 5000 நேரடி ஊழியர்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Retail, Adani group faceoff to acquire Germany Metro India business

Reliance Retail, Adani group faceoff to acquire Germany Metro India business மெட்ரோ: நேருக்கு நேர் மோதும் அம்பானி அதானி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.