மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே மரணித்த பிரபல பாடகர் – அதிர்ச்சியில் கடவுளின் தேசம்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எடவா பகுதியைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் (78). ஆலப்புழாவில், நேற்று முன்தினம் ப்ளூ டைமண்ட் இசைக்குழுவின் கச்சேரி நடந்தது. அப்போது எடவா பஷீர் மேடையில் ஓர் இந்திப் பாடலை பாடிக் கொண்டிருந்தார்.

எடவா பஷீரின் கடை இசை நிகழ்ச்சி

பாடிக் கொண்டிருக்கும்போதே அவர் திடீரென நிலை தடுமாறி விழுந்துவிட்டார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறினர். எடவா பஷீர் ப்ளூ டைமண்ட் இசைக்குழுவில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கிறார். பள்ளி காலத்தில் இருந்தே இசையுடன் பயணிக்கும் எடவா பஷீர், ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

எடவா பஷீர்

திரைப்படங்களில் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், தன் இசைக் கச்சேரிகளுக்கு பெயர் பெற்றவர். திருவனந்தபுரம் வர்களா பகுதியில் ‘சங்கீதாலயா’ என்ற ஓர் இசைக்குழுவை நடத்தி வந்தார்.

கேரள சுற்றுவட்டாரங்களில் நடக்கும் கோயில் நிகழ்ச்சிகளில் பஷீரின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘ஆகாசபூரணி.. அன்னபூரணி’ என்கிற அவரின் பாடல் மிகவும் பிரபலம். கேரளா மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஐரோப்பா, யூ,கே என்று பல்வேறு நாடுகளுக்கு பயணித்து பாடியிருக்கிறார்.

பினராயி விஜயன்

அவரது மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், பாடகர் சித்ரா உள்ளிட்ட இசைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.