சென்னை:
மேல்சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
வேட்பாளர்கள் இருவரும் இன்று காலையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
காலை 10 மணியளவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்தனர். தலைமைக்கழகத்தில் சிறிது நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் அனைவரும் கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்கள். அங்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சி.வி.சண்முகமும், தர்மரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் பலர் பங்கேற்றனர்.