மே 9 வன்முறை.. இலங்கை அரசுக்கு இப்படியொரு பிரச்சனையா..?

உலக நாடுகள் அனைத்தும் தற்போது இலங்கையின் பொருளாதாரச் சூழ்நிலையில் உற்று நோக்கி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரேட்டிங் அமைப்பு முக்கியமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

இந்த ஆய்வு இலங்கை அரசை மட்டும் அல்லாமல் இலங்கை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை

இலங்கை

மோசமான பொருளாதாரம் மற்றும் வர்த்தக நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே பதவி விலக வேண்டும் எனப் பல நாள் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்த பின்னர் அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைத் தாக்கியதால் மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது.

அரசு சொத்துக்கள்

அரசு சொத்துக்கள்

இந்த வன்முறையில் அரசு சொத்துக்களில் ஏற்பட்ட சேதம் மற்றும் இதர பாதிப்புகள் மூலம் இலங்கை அரசின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் சுமார் 1 பில்லியன் இலங்கை ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக நியூயார்க் நகரைச் சேர்ந்த Fitch அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாதிப்பு
 

பாதிப்பு

இலங்கை ஏற்பட்ட இந்த வன்முறையில் 10 பேர் மரணம் அடைந்தனர், 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர், 78 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களைத் தீயிட்டும், சேதப்படுத்தப்பட்டு உள்ளது.

நேஷனல் இன்சூரன்ஸ் டிரஸ்ட் பண்ட்

நேஷனல் இன்சூரன்ஸ் டிரஸ்ட் பண்ட்

இலங்கை அரசின் நேஷனல் இன்சூரன்ஸ் டிரஸ்ட் பண்ட் போர்டு (NITFB) இந்த அமைப்பு இலங்கையில் ஏற்படும் வேலைநிறுத்தம், போராட்டம், மக்கள் கலவரம் மற்றும் பயங்கரவாத ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பதிப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது. இதன் மூலம் மே 9ஆம் தேதி கலவரத்தின் மூலம் NITFB அமைப்பிற்கு 100 கோடி ரூபாய் (LKR) பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரக் கொள்கை

பொருளாதாரக் கொள்கை

ஏற்கனவே உலக வங்கி, ஐஎம்எப் அமைப்புகள் இலங்கை அரசிடம் சரியான பொருளாதாரக் கொள்கை இல்லாத காரணத்தால் கடன் உதவி திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசுக்கு ஏற்படும் 100 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SriLanka likely face 1 Billion sri lankan Rupee loss on may 9 violence

SriLanka govt owned insurance company national insurance trust fund board likely face 1 Billion srilankan Rupee loss on may 9 violence between anti and pro Mahinda Rajapaksa government protesters

Story first published: Monday, May 30, 2022, 14:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.