மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் 89-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நேற்று (மே-29) பேசிய பிரதமர் மோடி தமக்கு ஒரு ஜோடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பரிசளித்துள்ள தஞ்சையைச் சேர்ந்த தாரகைகள் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் பிரத்யேக விற்பனை அங்காடியை நடத்திவரும் தாரகை மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒரு ஜோடி ‘நடன பொம்மைகளை’ பிரதமர் நரேந்திர மோடிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், வானொலியில் தனது 89-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தாரகைகள் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் பேசியதாவது:
சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் எனக்கு ஒரு பரிசை அனுப்பினர். அது ஒரு சிறப்பான தஞ்சாவூர் பொம்மை. புவிசார் குறியீடு பெற்ற அந்த பரிசை எனக்கு அனுப்பிய தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவினருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சாவூர் சுய உதவிக் குழுவினர் தங்கள் தயாரிப்புகளை விற்க அங்குள்ள முக்கிய பகுதிகளில் ஒரு அங்காடியையும்இ சிறு கடைகளையும் திறந்திருக்கிறார்கள். அதற்கு ‘தாரகைகள் கைவினைப் பொருட்கள் அங்காடி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால் இந்த முயற்சியில் 22 சுய உதவிக் குழுக்கள் இணைந்திருக்கின்றன. இவர்கள் தஞ்சாவூர் பொம்மைஇ வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீட்டுப் பொருட்களைத் தவிரஇ பிற பொம்மைகள்இ தரை விரிப்புகள்இ செயற்கை நகைகள் ஆகியவற்றையும் தயாரிக்கின்றனர். இதன் காரணமாக கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களின் வருவாயும் அதிகரிப்பதால் அவர்களுக்கு அதிகாரப் பகிர்வும் கிடைக்கிறது.
மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் செயல்படும் சுய உதவிக் குழுக்களைக் கண்டறிந்து அவர்களின் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் சுய உதவிக் குழுவினரின்; வருவாய் அதிகரிப்பதுடன் சுயசார்பு இந்தியா பிரச்சாரத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.