போபால் : குஜராத்தில் 700 கோடி ரூபாய் அளவுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரியில் மோசடி செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலும், மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலும் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.மத்திய பிரதேசத்தில் போலி ரசீது மூலம் சிலர் வரி ஏய்ப்பு செய்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, இந்துாரில் உள்ள ஜி.எஸ்.டி., ஆணையம் மற்றும் ம.பி., சைபர் கிரைம் போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில், குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த ஐந்து வியாபாரிகள், மத்திய பிரதேசத்தில் 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, 700 கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி., செலுத்தாமல் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்த ஐந்து வியாபாரிகளையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, போலி முகவரி சான்றுகள், போலி அடையாள அட்டைகள், மொபைல் போன் சிம் கார்டுகள், லெட்டர் பேடுகள், போலி முத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஐந்து பேருமே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Advertisement