கவுஹாத்தி : வங்கதேசத்தில் இருந்து சுற்றுலா, மருத்துவ ‘விசா’க்கள் வாயிலாக இந்தியாவில் பயங்கரவாதிகள் நுழைவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வட கிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தடை செய்யப்பட்ட முஜாகிதீன் இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
மூளைச் சலவை
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள் சுற்றுலா, மருத்துவ விசாக்கள் வாயிலாக இந்தியாவில் நுழைந்து மக்களை மூளைச் சலவை செய்வது தெரியவந்துள்ளது.இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அசாமின் பார்பெட்ட பகுதியில் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக, வங்க தேசத்தில் இருந்து ஜலாலுதீன் ஒஸ்மானி என்பவர் வந்துள்ளார்.
அவர், இங்குள்ளோரிடம் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தி பேசி மூளைச் சலவை செய்துள்ளார். தேசப் பிதா மகாத்மா காந்தியை அவதுாறாக பேசியுள்ளார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் சுற்றுலாவுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் சுலபமாக விசா வழங்கப்படுவதால் அதைப் பயன்படுத்தி, இவர்களைப் போன்றவர்கள் இந்தியாவில் நுழைந்து ‘ஜிகாத்’ பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தடுப்பு நடவடிக்கை
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், ”இங்குள்ள சில தீய சக்திகளும், அடிப்படைவாதிகளும், ஜிகாதிகளுக்கு துணை போவது தெரியவந்துள்ளது. ”மக்கள் மனதில் பயங்கரவாத உணர்வை வளர்ப்பதே அவர்களின் நோக்கம். இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது,” என்றார்.
Advertisement