விக்ரம் 3 படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளதா? – கமல் சொன்ன பதில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் கமல்ஹாசன். ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. அதன் காரணமாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விக்ரம் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கமலஹாசன்.
இந்த நிலையில் ஒரு ரசிகர் கமலிடத்தில், விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் விஜய் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? என கேள்வி கேட்டார். அதற்கு கமல்ஹாசன், விக்ரம் 3 படத்தில் ஏற்கனவே ஒருவரை நடிப்பதற்கு கமிட் பண்ணி விட்டோம் என்று கூறினார். அப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கமலும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அதேசமயம் விஜய்யை வைத்து ராஜ்கமல் பிலிம்ஸ் படம் தயாரிக்க தயாராக உள்ளது. இன்னொரு படத்தில் அவருடன் ராஜ்கமல் பிலிம்ஸ் இணையும் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்தார் கமல். அந்த வகையில் அடுத்தபடியாக தனது பேனரில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பதற்கு கமலஹாசன் தயாராகிவிட்டார் என்பதை அவரது இந்த பேச்சு உறுதிப்படுத்துகிறது.