Raja rani 2 Serial Rating Update With promo : என்னப்பா இது அப்போ எங்கேயும் எப்போதும் இப்போ விஜயகாந்த் படம்… படத்துல இருக்க சீன் எல்லாம் சீரியலுக்காக காப்பியடிக்கிறீங்ளே என்று கேட்க வைத்துள்ளது ராஜா ராணி சீசன் 2.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் தற்போது நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாத கும்பலை கருவருக்கும் வேலை செய்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சினைகள வெடிகுண்டு பூகம்பம் என்று விளையாட்டாக சொல்வது வழக்கம். ஆனால் குடும்ப கதையாக உள்ள இந்த சீரியலில் தேவையில்லாத தீவிரவாதம் எதற்கு என்பது புரியாத புதிராகத்தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சந்தியாவுக்கு விபத்து நடந்தபோது ஜெய் அஞ்சலி நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் படம் நினைவுக்கு வந்தது.
ஆனால் இப்போது வந்திருக்கும் ப்ரமோ விஜயகாந்த நடிப்பில் வெளியான ஒரு படத்தின் காட்சிதான். அது என்ன படம் என்று கேட்கிறீர்களா… இந்த ப்ரமோவை வைத்து நீங்களே கண்டுபிடிங்க…
என்ன இன்னுமா தெரியவில்லை. இது விஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி. ராஜா ராணி சீரியலில் சிவகாமியின் மகள் பார்வதி கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு அவர்களது கடைசியில் வேலைபார்க்கும் ஒருவரால் கடத்தப்படுகிறாள். கடத்தியவன் ஒரு தீவிரவாதி. இப்போது அவரை கோவில் திருவிழாவில் குதிரை வேடம் போட்டு உடலில் பாம் கட்டி அனுப்பிவிட்டனர்.
இதில் பார்வதி தட்டுத்தடுமாறி கீழே விழும்போது அவளது மெட்டியை பார்த்துவிடும் சந்தியா பார்வதி என்று கத்திக்கொண்டு ஓட அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இது விஜயகாந்த் படத்தின் சீன் என்று ரசிகர்கள் காலாய்த்து வருகின்றனர்.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா படத்தில் தீவிரவாதி ஒருவர் ஹிஜாப் அணிந்துகொண்டு ஓட அவனை விஜயகாந்த் துரத்திக்கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் விஜயகாந்த அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார். அப்போது பார்த்தால் ஹிஜாப்குள் இருந்தது விஜயகாந்தின் காதலி. அதன்பிறகு அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளிப்பார்கள்.
இந்த இரண்டு சீனுக்கு சில வித்தியாசங்கள் உள்ளது. நரசிம்மா படத்தில் நாயகி ஹிஜாப் அணிந்துகொண்டு ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் ஓடுவார். ஆனால் ராஜா ராணி சீரியலில் கோவில் திருவிழாவில் பார்வதி குதிரை வேடம் போட்டுக்கொண்டு வருகிறார். அதில் விஜயகாந்த் அவரை சுட்டுவிடுவார். இதில் சந்தியா பார்வதியை கண்டுபிடித்துவிடுகிறார்.
ஏற்கனவே இந்த சீரியல் என் கணவன் என் தோழன் என்ற சீரியலின் மறுபதிப்பு என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அடிப்படி இப்படி படங்களில் சீனை காப்பியடித்தால் என்னதான் செய்வது… புதுசா எதாவது செய்ங்க டைராக்டர் சார்.