பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்துள்ள விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். கர்நாடக விவசாய சங்கத் தலைவர் ஒருவர் பணம் கோரியதாக வெளியான ரகசிய வீடியோ குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை அவர் ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கும்போது திடீரென அங்கு வந்த சிலர் ராகேஷ் திகாய்த் மீது மை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ராகேஷ் திகாய்த் ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு களேபரம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளைக் கொண்டு தாக்கிக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்துப் பேசிய ராகேஷ் திகாய்த், கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க. அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. இது கர்நாடக காவல் துறையின் தோல்வி. இது மிகப்பெரிய சதித்திட்டம் ஆகும். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…பஞ்சாபி பாடகர் படுகொலை- சிபிஐ, என்ஐஏ விசாரணை கோரும் தந்தை