5 மாதத்தில் 115 பில்லியன் டாலர் இழப்பு.. குழப்பத்தில் மும்மூர்த்திகள்..!

2022 துவக்கத்தில் இருந்து அடுக்கடுக்கான பல காரணத்தால் பங்குச்சந்தை அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட நிலையில் பல முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு பெரிய அளவில் சரிந்தது.

இதனால் உலகின் முன்னணி டெக் நிறுவன முதலாளிகளின் சொத்து மதிப்பு 5 மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிந்துள்ளது.

ஏமாற்றம்.. எல்ஐசி நிகரலாபம் 18% சரிவு.. ஆனால் முதலீட்டாளார்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

மும்மூர்த்திகள்

மும்மூர்த்திகள்

டெஸ்லா எலான் மஸ்க், அமேசான் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் ஆகியோரின் சொத்து மதிப்பு பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்ததால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. கடந்த ஐந்து மாதத்தில் மும்மூர்த்திகளின் மொத்த சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலரை இழந்துள்ளனர்.

சொத்து மதிப்பு சரிவு

சொத்து மதிப்பு சரிவு

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, இந்த 5 மாதத்தில் அதாவது 2022ஆம் ஆண்டின் 5 மாதத்தில் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 46.4 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இதை தொடர்ந்து ஜெப் பெசோஸ் 53.2 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதேவேளையில் பில் கேட்ஸ் 15.1 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளது.

பங்குச்சந்தை சரிவு
 

பங்குச்சந்தை சரிவு

எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் சொத்து மதிப்பு பெரும் பகுதி அவர்கள் துவங்கிய நிறுவனத்தின் பங்கு இருப்பு வாயிலாக இருக்கும் காரணத்தால் பங்குச்சந்தை சரிவு இவர்களின் சொத்து மதிப்பை பெரிய அளவில் பாதிக்கிறது. இதன் படி எலான் மஸ்க் தற்போது 224 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும், ஜெப் பெசோஸ் 139 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும், மற்றும் பில் கேட்ஸ் 123 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும் உள்ளது.

பெர்னார்டு அர்னால்டு

பெர்னார்டு அர்னால்டு

இவர்களை போலவே பிரான்ஸ் ஆடம்பர நிறுவனமான LVHM-ன் உரிமையாளரான பெர்னார்டு அர்னால்டு சொத்து மதிப்பு இந்த 5 மாதத்தில் 44.7 பில்லியன் டாலர் சரிந்து 133 பில்லியன் டாலராக உள்ளது. பெர்னார்டு அர்னால்டு உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆக உள்ளார்.

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க் சுமார் 15.6 சதவீத பங்குகளை வைத்துள்ளார், இதன் மதிப்பு மட்டும் 122 பில்லியன் டாலராகும். இதேபோல் 2022ல் டெஸ்லா பங்குகள் சுமார் 37 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk, Jeff Bezos, Bill Gates Lost $115 Billion In 5 Months amid massive market fall

Elon Musk, Jeff Bezos, Bill Gates Lost $115 Billion In 5 Months amid massive market fall 5 மாதத்தில் 115 பில்லியன் டாலர் இழப்பு.. குழப்பத்தில் மும்மூர்த்திகள்..!

Story first published: Monday, May 30, 2022, 20:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.