பிரான்சின் பறக்கும் மனிதர் என அழைக்கப்படும் Franky Zapata (43), தனது ஜெட் பேக்கின் உதவியுடன் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் நபராவார்.
அவரது சொந்தக் கண்டுபிடிப்பான ஜெட் பேக்கின் உதவியுடன் அவர் பல்வேறு சாகச நிகழ்வுகளை நிகழ்த்தி வரும் நிலையில், பிரான்சிலுள்ள Landes என்ற இடத்தில் அமைந்துள்ள Biscarrosse ஏரியில் சாகச நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் காட்டுவதற்காக வந்திருந்தார் அவர்.
கூடியிருந்த மக்கள் முன் தனது ஜெட் பேக் உதவியுடன் அவர் பறக்கத் துவங்க, திடீரென அவரது ஜெட் பேக்கில் ஏதோ கோளாறு ஏற்பட்டது.
Crash impressionnant de @frankyzapata aujourd’hui au meeting aérien de #biscarrosse Heureusement il est tombé dans l’eau et devrait s’en sortir je l’espère sans trop de soucis. #frankyzapata #biscarrosse #crash pic.twitter.com/SjWbGOp74W
— Alex (@Alex170346741) May 28, 2022
அதனால், வேகமாக சுழலத் துவங்கிய Zapata, 50 அடி உயரத்திலிருந்து ஏரியில் விழுந்தார்.
மக்கள் பதற, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் அவர்.
ஆனாலும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரது உடல் அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அவர் மருத்துவர்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கலந்துகொள்ள இருந்த மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.