பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் அறநிலைத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூரில் உள்ள ஒரு கோயிலை புணரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் அளவில் பொதுமக்களிடம் நிதி வசூலித்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத் கைது செய்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் கோபிநாத் அளிக்கும் பதில்கள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.