Reliance Jio: நாட்டின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான
ரிலையன்ஸ் ஜியோ
, தொடர்ந்து தனது சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மலையேறும் யாத்ரீகர்களுக்கு, தனது நெட்வொர்க் சிக்னல் கிடைக்க ஜியோ வழிவகை செய்துள்ளது.
பத்ரிநாத்-கேதார்நாத் மந்திர் சமிதியின் தலைவர் அஜேந்திர அஜய் கேதார்நாத் மலையேற்ற பாதையில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் மற்றும் டேட்டா சேவைகளை தொடங்கி வைத்தார்.
JioPhone Next: மிகப்பெரும் தள்ளுபடி விலையில் ஜியோ 4ஜி போன் – விலைய பாத்து ஷாக் ஆகிடாதீங்க!
மலை உச்சியிலும் சேவை
இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ கௌரிகுண்ட் மற்றும் ஹிமாலயன் புனித தலத்திற்கு இடையிலான மலையேற்ற பாதையில் மொபைல் மற்றும் டேட்டா இணைப்பை வழங்கும் முதல் ஆபரேட்டர் என்று தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இனி தங்கள் அன்புக்குரியவர்களுடன் குரல் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பில் இருக்கலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ கூறியுள்ளது.
இந்த ஆண்டு சார் தாம் யாத்திரையில் அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் வருவதால், பக்தர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு அனுபவத்தை வழங்குவதற்காக, கேதார்நாத் மலையேற்றப் பாதையில் ஜியோ தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த யாத்திரைக்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுமதிக்கப்படும் இமயமலைக் கோயில்களுக்கான தரிசனத்தால், இந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Masked Aadhaar: மாஸ்க்டு ஆதார்! எப்படி டவுன்லோட் செய்வது?
ஐந்து டவர்கள்
கௌரிகுண்ட் மற்றும் கேதார்நாத் இடையே ஐந்து கோபுரங்களை நிறுவும் திட்டத்தை ஜியோ நிறுவனம் செயல்படுத்தி உள்ளது. மிக முக்கிய இடமான சோன்பிரயாக்கில் முழு திறன் கொண்ட கோபுரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
சோட்டி லிஞ்சோலி, லிஞ்சோலி மற்றும் ருத்ராபாயின்ட் ஆகிய இடங்களில் மூன்று கோபுரங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன என்றும் மீதமுள்ள இரண்டு விரைவில் அமைக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தனது அறிக்கையில் தெளிவுப்படுத்தி உள்ளது.
இது மட்டுமில்லாமல், கூடுதலாக 10 விதத்தில் சேவை மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலம் இணைக்கப்பட்ட சேவையையும் பயனர்கள் பெற முடியும் என்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
Jio 5G: ஜியோ 5ஜி வேகம் என்ன தெரியுமா மக்களே!
ஜியோ 5ஜி
இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கும் இந்தியாவில் 5ஜி சேவை பயனர்களுக்குக் கிடைக்கும் என்று அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, ஜியோ நிறுவனமும் 5ஜி நெட்வொர்க்கை சோதனை செய்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
சமீபத்தில் நிறுவனம் நடத்திய சோதனையில், 8 மாநிலங்களில் 1.5Gbps வேகத்தை எட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், இது போட்டி நிறுவனங்களை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.